உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது

சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர், எட்டு வயது சிறுமி. சிறுமியின் தந்தை அந்தமானில் பணிபுரிகிறார். தாயுடன் வசித்து வரும் சிறுமி, அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி வீட்டில் துாங்கும் போது, 'என்னை விட்டு விடுங்கள்' என, உளறியுள்ளார். சிறுமியின் தாய் விசாரித்தார். அதில், அக்., 10 மாலை, 5:30 மணிக்கு, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமியிடம், ஜெய்னுதீன், 54, என்பவர், வீட்டில் விடுவதாக கூறி டூ - வீலரில் அழைத்து சென்று தொந்தரவு செய்தார். மேலும், இது குறித்து யாரிடமாவது கூறினால், 'உன்னை கொன்று விடுவேன்' என மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய், நேற்று முன்தினம் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், போக்சோவில் ஜெய்னுதீனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ