உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மதுரையில் அரசு, தனியார் பஸ்களில் ஏற்ற மறுப்பு: அவதிக்குள்ளாகும் மானாமதுரை பயணிகள்

மதுரையில் அரசு, தனியார் பஸ்களில் ஏற்ற மறுப்பு: அவதிக்குள்ளாகும் மானாமதுரை பயணிகள்

மானாமதுரை: மதுரை எம்.ஜி.ஆர்., (மாட்டுத்தாவணி) பஸ் ஸ்டாண்டிலிருந்து மானாமதுரைக்கு செல்லும் பயணிகளை அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏற்ற மறுப்பதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மதுரை மாட்டுத்தாவணி (எம்.ஜி.ஆர்) பஸ் ஸ்டாண்டிலிருந்து பரமக்குடி,ராமநாதபுரம், ராமேஸ்வரத்திற்கு 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன் டூ ஒன், ஒன் டூ திரி, பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்களில் திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம், மானாமதுரையில் பஸ்கள் நிற்காது என பஸ்சில் ஏற செல்லும் பயணிகளை கண்டக்டர், டிரைவர்கள் தடுத்து அவமதிப்பு செய்கின்றனர். இதனால், உரிய நேரத்தில் மதுரையில் இருந்து மானாமதுரைக்கு வர முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது, மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் பஸ்களில் போதிய இருக்கைகள் இருந்தும் மானாமதுரைக்கு பயணிகளை ஏற்ற கண்டக்டர், டிரைவர்கள் மறுக்கின்றனர். பஸ்சில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பின்னரே, மானாமதுரைக்கு நின்று கொண்டே தான் வர வேண்டும் என வற்புறுத்தி ஏற்றுகின்றனர். சில பஸ்களில் நின்று கொண்டே மானாமதுரைக்கு வரக்கூட கண்டக்டர், டிரைவர்கள் அனுமதிக்கவில்லை. இது குறித்து பலமுறை போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் செய்தும், எந்தநடவடிக்கையும் இல்லை, என்றனர். /


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ