உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டுபட்டி மஞ்சு விரட்டு காளை முட்டி ஒருவர் பலி

கண்டுபட்டி மஞ்சு விரட்டு காளை முட்டி ஒருவர் பலி

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், கண்டுபட்டி பழைய அந்தோணியார் சர்ச்சில் தை 5ல் பொங்கல் விழா நடைபெறும். அன்றைய தினம் சர்ச் முன் பொங்கல் வைத்து வழிபடுவர்.நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை ஊத்திக்குளம், மேலக்காடு, கண்டுபட்டியில் 653 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில், 550 காளைகள் திறந்த வெளி பொட்டலில் அவிழ்த்து விடப்பட்டன.ஊத்திக்குளம் அருகே கோவினிபட்டி பூரணம் மகன் பூமிநாதன், 50, தன் காளையை அவிழ்த்து விட்டார். அந்த காளை அவர் கழுத்தில் குத்தியது. அதில் பலத்த காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். காளைகள் முட்டியதில் 119 பேர் காயமுற்றனர். இவர்களில் 30 பேரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கூட்டத்தை கலைத்து விட்டு ஜீப்பிற்கு சென்ற காரைக்குடி போலீஸ்காரர் சிவகங்கை அருகே கீழவாணியங்குடியைச் சேர்ந்த உடையனசாமி, 50, முதுகில் காளை குத்தியதில் காயமுற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Matt P
ஜன 20, 2024 22:02

ஜல்லிக்கட்டு உயிர் பலி வாங்கியாச்சு. நூற்று பதினாறு பேர் காயமுற்றனர்.முப்பது பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி.ஜீப்பிற்கு சென்ற காரைக்குடி போலீஸ்காரர் சிவகங்கை அருகே கீழவாணியங்குடியைச் சேர்ந்த உடையனசாமி, 50, முதுகில் காளை...அவங்க குடும்பத்துக்கு கார் பைக் எல்லாம் வேண்டாம். கொஞ்சம் அதிகமா போட்டு கொடுங்க.உதவியா இருக்கும்.நாட்டுக்கு தேவையான முக்கியமான விளையாட்டு. நடத்துங்க.இந்த மாதிரி விளையாட்டுக்கள் எல்லாம் பல நாடுகளிலும் தான் இருந்திருக்கிறது. காலத்திற்கு தகுந்த மாதிரி கோலத்தை மாற்றி முடிந்த அளவு வாழ்க்கைக்கு காயம் ஏற்படஆத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவிலும் ஒருவர் மட்டும் இளம் காளையின் மீது அமர்ந்து கொண்டு .காளையை அடக்கி வேடிக்கை பார்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது....அதனால் பாதிக்கப்படுவது யாரும் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இனிமேல் இந்த மாதிரியான விளையாட்டுகளில் கலந்து கொள்ள செய்வார்களா என்பது சந்தேகம் தான். பட்டால் தான் தெரியும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை