உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொடுங்குன்றம்பட்டியில் மஞ்சுவிரட்டு

கொடுங்குன்றம்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டி பாலடி கருப்பர், காலபைரவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. கிராமத்தினர் தொழுவுக்கு ஊர்வலமாக வந்து அனைத்து காளைகளுக்கும் வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். முதலில் கோயில் மாடுகள் அவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து மற்ற மாடுகள் அவிழ்க்கப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். இதே போல் எஸ்.எஸ்.கோட்டையில் படைத்தலைவி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை