மேலும் செய்திகள்
மாநில தடகளப் போட்டிக்கு ஏழு மாணவர்கள் தேர்வு
18-Oct-2025
சிவகங்கை: மாநில அளவிலான ஓட்டம், கராத்தே போட்டி யில் வெற்றி பெற்று சிவ கங்கையை சேர்ந்த மாணவர்கள் பதக்கம் பெற்று உள்ளனர். தஞ்சாவூரில் குடியரசு தின விழா மாநில தடகளப்போட்டி நடந்தது. இதில், சிவ கங்கையை சேர்ந்த மாணவர் வி.வதின் 18, பங்கேற்றார். இவர் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் விளையாடி மாநில அளவில் முதலிடம் பிடித்து பதக்கம் சான்றினை பெற்றார். ஈரோட்டில் மாநில கராத்தே மாணவர்களுக்கான போட்டி நடந்தது. இதில், சிவகங்கை 21ம் நுாற்றாண்டு மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.சுஜன் சிங், 62 கிலோ எடை பிரிவு கராத்தே போட்டியில் விளையாடி மாநில அளவில் முதலிடம் பிடித்து பதக்கம் பெற்றார். அடுத்த ஆண்டு புனேயில் நடக்க உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
18-Oct-2025