உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவ பரிசோதனை முகாம்

மருத்துவ பரிசோதனை முகாம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை இளையோர் செஞ்சிலுவை சங்கம் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., யோகா படிப்பு மையம், சுகாதார மையம், அழகப்பா பல்கலை ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்கம், சிட்டி யூனியன் வங்கி, காரைக்குடி மகரிஷி வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி ரோட்டரி பியர்ஸ் சங்கம் சார்பில் அழகப்பா பல்கலையில் ரத்ததான மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தொடங்கி வைத்து பேசினார். காரைக்குடி அப்பல்லோரீச் மருத்துவமனை டாக்டர் செல்வராஜ் ஜெயசீலன், காரைக்குடி பிரபு டெண்டல் மருத்துவமனை குழுவினர் ஆலோசனை வழங்கினர். அழகப்பா பல்கலை ஆட்சி குழு உறுப்பினர் சேகர் மற்றும் பழனிச்சாமி வாழ்த்தினர்.சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்கத் தலைவர் சுந்தரராமன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கணேசன் மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !