உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனையில் காலாவதி மாத்திரை வழங்கலா மருத்துவ அலுவலர் மறுப்பு

அரசு மருத்துவமனையில் காலாவதி மாத்திரை வழங்கலா மருத்துவ அலுவலர் மறுப்பு

மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனையில் காலாவதியான மாத்திரை வழங்கியதாக சர்ச்சை எழுந்த நிலையில் தலைமை மருத்துவ அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.கடந்த 11ஆம் தேதி மானாமதுரை அருகே மிளகனுாரைச் சேர்ந்த வாலிபர் வயிற்று வலி காரணமாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து மாத்திரை வழங்கியுள்ளனர். மாத்திரைகளை வாங்கிச் சென்ற அவர் வீட்டிற்கு சென்று பார்த்த பிறகு அது கடந்த மே மாதத்தோடு காலாவதியானது தெரியவந்தது.மானாமதுரை அரசு மருத்துவமனை மருந்தகத்திற்கு வந்து மருந்தாளுனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.தலைமை மருத்துவ அலுவலர் அசாருதீன் கூறியதாவது: இங்குள்ள மருந்தகத்தில் காலாவதி தேதி முடிவடையும் 3 மாதத்திற்கு முன்னதாகவே மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்காமல் எடுத்து வைத்து விடுவோம்.மேலும் கடந்த மாதம் தான் தேசிய தர நிர்ணய சான்று குழுவினர் ஆய்வுக்கு வந்ததினால் மருந்தகத்தில் அனைத்து மருந்துகளையும் சோதனை செய்த பிறகுதான் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறோம். ஆகவே காலாவதியான மாத்திரைகள் வழங்க வாய்ப்பில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை