உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேலப்பசலை பரலோக ராக்கினி சர்ச் தேர்பவனி

மேலப்பசலை பரலோக ராக்கினி சர்ச் தேர்பவனி

மானாமதுரை: மானாமதுரை அருகே மேலப்பசலை புனித பரலோகராக்கினி சர்ச் விழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது.இந்த சர்ச்சில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் சர்ச்சில் நவநாள் திருப்பலி, சிறப்பு ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பாதிரியார் எட்வர்ட்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, நற்கருணை பெருவிழா நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு, முக்கியவீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. ஏற்பாட்டை இருதயராஜன் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை