மேலும் செய்திகள்
ரோட்டில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
30-Nov-2024
இளையான்குடி: இளையான்குடி சாலையூர் தனியார் வங்கி ஏ.டி.எம்மில் கடந்த மாதம் 4ம் தேதி மாலை அஜய் என்ற இளைஞர் பணம் எடுக்க சென்றுள்ளார். அவர் ஏ.டி.எம்.,மில் பணம் வராமல் இருந்ததையடுத்து வீட்டிற்கு சென்று விட்டார்.அதே ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க இளையான்குடி மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அகமது ஜலால் வந்த போது ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் வெளியே நீட்டி கொண்டிருப்பதை பார்த்து அதனை எடுத்து இளையான்குடி போலீசில் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க கூறினார். போலீசார் விசாரணை செய்து நேற்று அந்த இளைஞரான அஜயின் தாயார் மாரீஸ்வதியிடம் ரூ.10 ஆயிரத்தை ஒப்படைத்தனர்.
30-Nov-2024