உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மொச்சியனேந்தல் கண்மாய் நீர்பிடிப்பு ஆக்கிரமிப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மொச்சியனேந்தல் கண்மாய் நீர்பிடிப்பு ஆக்கிரமிப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: இளையான்குடி அருகே மொச்சியனேந்தலில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் பயிர்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இளையான்குடி ஒன்றியம், நரிக்குடி அருகே உள்ள மொச்சியனேந்தல் கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதால், இங்கிருக்கும் கண்மாயை நம்பி தான் 110 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் மழையை நம்பி நெல் நடவு செய்துள்ளனர். கண்மாய் நீர்பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்களையும் சேதப்படுத்தி, மழை நீர் சேகரமாக முடியாத வகையில் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் கட்டடம் கட்டி, விவசாயத்திற்கு ஆதாரமான கண்மாய்க்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அக்., 13 அன்று கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இளையான்குடி தாசில்தார், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் நேரடி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். நடவடிக்கை இல்லாததால் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களுடன் வந்து கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு, விவசாயத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில் இருந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி