சிவகங்கையில் குரங்கு தொல்லை
சிவகங்கை : சிவகங்கை பள்ளி தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளின் ஓட்டை பிரித்தும் ஜன்னல் வழியாக நுழைந்து சமையலறையில் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்வதும், அவற்றை சிதற விட்டு செல்வதும் தொடர்கிறது. வீடுகளில் ஆட்கள் இருந்தாலும் பயமின்றி உள்ளே நுழைகின்றன. நேற்று ஒரு சிறுவனை குரங்கு கடித்துள்ளது. சிறுவனின் பெற்றோர் மருத்துவக் கல்லுாரிக்கு சிகிச்சைக்காக சிறுவனை அழைத்து வந்தனர். அங்கு ஆய்வில் இருந்த கலெக்டர் பொற்கொடியிடம் குரங்கு பிரச்னை குறித்து புகார் அளித்தனர். கலெக்டர் வனத்துறையிடம் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.