சிவகங்கையில் இயல்பை விட கூடுதல் மழை: நெல் விளைச்சல் வரும் என விவசாயிகள் நம்பிக்கை
2024ம் ஆண்டு ஜூன் முதல் செப்., வரையிலான தென்மேற்கு பருவ மழை காலத்தில் 302.94மி.மீ., மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழை காலமான அக். முதல் டிச. வரை 609 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக அக்டோபரில் 306.92மி.மீ., மழை பெய்துள்ளது. பிப்ரவரியில் முற்றிலும் மழை பெய்யவில்லை. டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவ மழை பெய்யும். ஒட்டு மொத்தமாக 2024ம் ஆண்டு ஜன. முதல் டிச. வரை 1161.91 மி.மீ., மழை பெய்துஉள்ளது. 2024ம் ஆண்டு சராசரி மழை அளவான 904.7மி.மீ.,யை விட 257மி.மீ., கூடுதலாகவே மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்குடியில் 143.6மி.மீ., குறைந்தபட்சமாக மானாமதுரையில் 86.1மி.மீ., மழை பெய்துள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையே விவசாயத்திற்கு கை கொடுக்கும். இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றிய நிலையில் தென் மேற்கு பருவமழையின் தொடக்கம் நம்பிக்கை தரும் வகையில் இருந்தது. ஆனால் பின்னர் மழை இல்லை. இதனால் விவசாயத்திற்கான முதற்கட்டப்பணிகள் செய்த விவசாயிகள் பின்னர் பணிகளை தொடராமல் நிறுத்தினர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடக்கத்தில் இருந்தே கனமழையாக பெய்ததால் மாவட்டத்தின் அனைத்துபகுதிகளிலும் விவசாயப்பணி முழுவீச்சில் நடந்தது.டிசம்பரில் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. சில பகுதிகளில் மறுகால் சென்றது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் உள்ள கண்மாய்,குளங்களில் நீர் உள்ளது. தொடர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ஆடியில் விதைப்பு பணி நடப்பது வழக்கம். போதிய மழை இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக ஆற்றுப்பாசன பகுதிகள், மோட்டார் மூலம் நீர் பாய்ச்சுபவர்கள் மட்டுமே ஆடிப்பட்ட விதைப்பை மேற்கொண்டு வருகின்றனர். தென்மேற்கு பருவமழையை நம்பி விவசாயம் செய்யும் நிலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே படிப்படியாக குறைந்து விட்டது. வடகிழக்கு பருவமழையை நம்பி விதைப்பு பணி நடந்தது. மழையும்நம்பிக்கை தரும் வகையில் இருந்தது. இதனால்மாவட்டத்தில் சில பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் போதிய விளைச்சல்இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.