உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை அமைத்து 20 ஆண்டுகளாச்சு வாகன ஓட்டிகள் அவதி

சாலை அமைத்து 20 ஆண்டுகளாச்சு வாகன ஓட்டிகள் அவதி

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள தேவகோட்டை ரஸ்தாவில், 20 ஆண்டுகளாக சாலையின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அமராவதிப்புதுார் ஊராட்சி தேவகோட்டை ரஸ்தாவில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தவிர தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷன் உள்ளதால் பலர் இங்கு வந்து செல்கின்றனர்.இங்குள்ள ஜமீன்தார் காலனி ரோடு முற்றிலும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலை போடப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் புதிய சாலை அமைக்கப்படவில்லை. இதுகுறித்து மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி