உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டின் இருபுறமும் பெருகும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா: சிவகங்கையில் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ரோட்டின் இருபுறமும் பெருகும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா: சிவகங்கையில் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, தேவகோட்டை வருவாய் கோட்டங்களையும், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்துார், சிங்கம்புணரி என 9 தாலுகாக்களையும் 521 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அனைத்து பகுதிகளிலும் ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.ரோட்டின் அளவு குறுகி விட்டதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.குறிப்பாக சிவகங்கை நகரின் முக்கிய கடைவீதியாக நேருபஜார், காந்திவீதி, தாலுகா அலுவலக ரோடு, அரண்மனை பகுதி உள்ளது. இங்குள்ள ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் ரோட்டின் அளவு குறுகி விட்டது.சிவகங்கை தொண்டி ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. கொல்லங்குடி கிராமத்தில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடை அதிகம் உள்ளது.நீதிமன்றம் இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வாரச்சந்தை பகுதி வரை இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளது.ரோட்டில் வாகனம் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதேபோல் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதியில் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளது. திருப்புத்துாரில் மதுரை காரைக்குடி ரோட்டிலும் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது.

புதிது புதிதாக முளைக்கும் கடைகள்

சிவகங்கை நகரில் புதிது புதிதாக தெருக்களின் ஓரங்களில் கடைகள் அமைக்கப்படுகிறது. மஜித்ரோடு, உழவர்சந்தை, தாலுகா அலுவலக ரோடு அம்மா உணவகம் பகுதி, பழைய மருத்துவமனை இளையான்குடி மானாமதுரை ரோடு சந்திப்பு பகுதி, ராமச்சந்திர பூங்கா உள்ளிட்ட பகுதியில் இது போன்ற கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.நகராட்சி சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. மாவட்ட நிர்வாகம் சிவகங்கை நகர் உட்பட மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை