மவுண்ட் சீயோன் பள்ளி சாதனை
காரைக்குடி: பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் லேணாவிலக்கு மவுண்ட் சீயோன் சிபிஎஸ்இ பள்ளி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.பிளஸ் 2 வில் மாவட்ட அளவில் முதல் 6 இடங்களை 7 மாணவர்கள்,10-ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் 9 இடங்களை 13 மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். பிளஸ் 2வில் என்.ராம் 500க்கு 488, டி.சந்தோஷ் 485, ஜெ.ஏ.ஜோஸ்னா 484, ஆர். ரெமி பயஸ் 483, ஆர்.ஹர்ஷத் 481, எம்.தெய்வானை மற்றும் எஸ்.ஏ.விஸ்வநாத் 480 மதிப்பெண் பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பில் சி.மிதுன் கைலாஷ் 495, ஆர்.எஸ்.சஹானா 491, ஏ.ஹரிணி, ஆர்.தாருண்யா ஸ்ரீ 489 இ.நிரஞ்சன், எஸ்.சாதிகா 488, ஸ்ரீ ஹரிகுமரன் 486 சி.ஜோயல் எஸ்லி,எஸ்.லிங்க நாகேஷ்வரன் 485 அகிலேஷ் பாலன் 483, வி.அனன்யா, எஸ்.ஆர்.பிரித்வி 482, எஸ்.கமலி 481 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்து பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்களை பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளி முதல்வர் ஜலஜாகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.