மேலும் செய்திகள்
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கூரை பணி: எம்.பி., ஆய்வு
16-Jun-2025
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பணியை ஆய்வு செய்த எம்.பி.,கார்த்தி பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்டில் கடந்த ஆட்சியில் காளையார்கோவில், தொண்டி, மானாமதுரை, மேலுார் பஸ்கள் நிற்க ரூ.74 லட்சத்தில் தகரத்தால் கூரை அமைக்கப்பட்டது.பின்னர் இந்த பகுதியில் மட்டும் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கியது.நீண்ட இழுபறிக்கு பின்னர் 18 கடைகள், தரைதளம், கழிப்பிடம் கட்டப்பட்டது.தற்போது திருப்புத்துார், மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் இரண்டாம் கட்டமாக கூரை அமைக்க முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.,யுமான சிதம்பரம் சிவகங்கை எம்.பி., கார்த்தி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வீதம் 2 கோடி ஒதுக்கினர்.கடந்த பிப்.26ம் தேதி இதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு மதுரை,திருச்சி, திருப்புத்துார் பஸ்கள் நிற்கும் பகுதிகளில் கூரை, தோரணவாயில், சி.சி.டி.வி., கேமரா, பஸ்களின் வருகையை அறிய டிஜிட்டல் பலகை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த பணிகளை நேற்று எம்.பி., கார்த்தி கலெக்டர் பொற்கொடி தலைமையில் ஆய்வு செய்து ஒப்பந்ததார்களிடம் கட்டுமானப்பணி குறித்து கேட்டறிந்து பணியை தரமாகவும் விரைந்தும் முடிக்க அறிவுறுத்தினார்.அப்போது ஒப்பந்ததாரர் பஸ் ஸ்டாண்டிற்குள் கூரை அமைப்பதற்கு மின்கம்பங்கள் இடையூறாக இருப்பதாகவும் அதை மாற்றக்கோரி மின்வாரியத்திடம் கூறியும் மாற்றாமல் இருப்பதால் பணி தாமதம் ஆவதாக தெரிவித்தார்.அதற்கு கலெக்டர் பொற்கொடி மின்வாரிய அலுவலர்களிடம் போனில் பேசி உடனடியாக மாற்ற உத்தரவிட்டார். கட்டுமானப் பணியை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று எம்.பி., அறிவுறுத்தினார்.
16-Jun-2025