முளைப்பாரி விழா
மானாமதுரை: மானாமதுரை அழகர் கோயில் தெரு மாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் முளைப்பாரி வளர்க்கும் இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கும்மிப்பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். முளைப்பாரி உற்ஸவ தினத்தன்று அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற்ற பின்னர் முளைப்பாரிகளை பெண்கள் துாக்கி கொண்டு முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தில் கரைத்தனர். ஏற்பாடுகளை அழகர் கோயில் தெரு பக்தர்கள் செய்திருந்தனர்.