உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மனு வாங்க கூட ஊழியர்கள் இல்லாத நகராட்சி

மனு வாங்க கூட ஊழியர்கள் இல்லாத நகராட்சி

சிவகங்கை:சிவகங்கை நகராட்சியில் அதிகாரிகள் இல்லாத தால் காலி இருக்கைகளுடன் நகராட்சி அலுவலகம் காட்சியளிப்பதால் மக்கள் வேதனைப்படுகின்றனர். சிவகங்கை நகராட்சி மாவட்டத்தின் தலைநகர். இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது புதிதாக அருகில் உள்ள ஊராட்சியான வாணியங்குடி, காஞ்சிரங்கால் இணைக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் பெரும் பாலான பணியிடங்கள் காலியாக உள்ளது. நகராட்சியில் நடைபெறக்கூடிய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நகராட்சியில் நடைபெறக் கூடிய திட்டப் பணி களையும் ஆய்வு செய்ய முடியாது நிலை உள்ளது. அனைத்து பணியும் மந்தமாக நடக்கிறது. நகராட்சியில் 6 மாதமாக மேலாளர் பணியிடம், இளநிலை உதவியாளர் பணி யிடம் 5 காலியாக உள்ளது. 3 மாதங்களாக சுகாதார அலுவலர் பணியிடம், 2 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் ஒன்று காலியாக உள்ளது. 6 துப்புரவுபார்வையாளர் பணியிடங்களில் 3 காலியாக உள்ளன. வார்டுகளில் துாய்மை பணி பாதிக்கப்படுகிறது. வருவாய் ஆய்வாளர் பணியிடமும் 3 பில் கலெக்டர் பணியிடங்களும் காலியாக உள்ளன. நகரில் வரி வசூல் நகராட்சி கடை வாடகை வசூல் உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. நகரமைப்பு ஆய்வாளர் பணியிடம், உதவிப் பொறியாளர் பணியிடம், 2 மேற்பார்வை யாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. நகராட்சியில் நடை பெறும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிப்பது, கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வது பாதிக்கப் பட்டுள்ளது. கமிஷனராக இருந்த கிருஷ்ணாராம் சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அலு வலக கண்காணிப்பாளராக மாற்றப்பட்டதால் திருமங்கலம் நகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பொறி யாளர் முத்துவும் மதுரைக்கு மாற்றப் பட்டார். நகராட்சி அலுவலகத்தில் அனைத்து இருக்கைகளும் காலியாக உள்ளது. பொதுமக்கள் நகராட்சிக்கு வந்தால் புகார்களை தெரிவிப்பதற்கும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் அதிகாரிகள் இல்லை. கூட்டுறவுத்துறை அமைச்சரான பெரிய கருப்பன் இப்பிரச்னையில் தலையிட்டு மாவட்ட மக்கள் பிரச்னைகளை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி