உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தில் நடக்காத அருங்காட்சியக தின விழா

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தில் நடக்காத அருங்காட்சியக தின விழா

கீழடி : சர்வதேச அருங்காட்சியக தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக தொல்லியல் துறை இது தொடர்பாக எந்த வித ஏற்பாடுகளும் செய்யாதது சுற்றுலா பயணிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் மே 18ம் தேதி சர்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது. அருங்காட்சியக தினத்திற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விழாக்கள், சலுகைகள், இலவச அனுமதி உள்ளிட்டவைகள் வழங்கப்படும். மத்திய தொல்லியல் துறை ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நாட்களில் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.நேற்று சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மகாபலிபுரம் குடைவரை கோயில் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் ஒருநாள் இலவச அனுமதி அளித்திருந்தது. முன்கூட்டியே இது தொடர்பாக அறிவிப்பு வெளியானதால் நேற்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர். தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கீழடி அருங்காட்சியகத்தில் எந்த வித இலவச அனுமதியும் கிடையாது என்ற நிலையில் சர்வதேச அருங்காட்சியக தினம் என்பதே பலருக்கும் தெரியவில்லை. தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் சிறப்பு நாட்களில் அதனை விழாவாக கொண்டாடும் போது பார்வையாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்வதேச அருங்காட்சியக தினம் என்பதே அருங்காட்சியகத்தில் யாருக்குமே தெரியவில்லை. இது குறித்து தொல்லியல் துறை கமிஷனர் சிவானந்தத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டும், குறுந்தகவல் அனுப்பியும், எந்தவித பதிலும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி