உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஸ்ட் : விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்

மஸ்ட் : விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்

சிவகங்கை: சிவகங்கையில் ஹிந்து முன்னணி,பா.ஜ., சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. சிலைகளை நகரின் பல்வேறு வீதிகள் வழியாக சென்று தெப்பக்குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நகரில் 14 இடங்களில் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்திருந்தனர். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செய்தனர். நேற்று அனைத்து சிலைகளும் ஊர்வலமாக சிவன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. சிவன் கோயில் முன் வரிசையாக நிறுத்தப்பட்ட சிலைகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் குணசேகரன் தலைமை வகித்தனர். நகர் தலைவர் உதயா வரவேற்றார். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சிறுபான்மையினர் பிரிவு பொது செயலாளர் வேலுார் இப்ராஹிம் சிறப்பு வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், நகர் பொது செயலாளர் பாலா, சதீஷ் உட்பட அனைத்து பிரிவுகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்வி குழும துணைதலைவர் ராமேஸ்வரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் அரண்மனைவாசல், மதுரை முக்கு, திருப்புத்துார் ரோடு, ராமசந்திரா பூங்கா, வாரச்சந்தை வழியாக தெப்பக்குளம் வரை வந்தது. அங்கு அனைத்து சிலைகளையும் விசர்ஜனம் செய்தனர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !