உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர் சாவில் மர்மம்: தனியார் பள்ளி மீது புகார்

மாணவர் சாவில் மர்மம்: தனியார் பள்ளி மீது புகார்

சிங்கம்புணரி: தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் சிறுவன் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் - அழகு மீனா தம்பதியின் 7 வயது மகன் அஸ்விந்த், தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். நேற்று மாலை, சிறுவனின் பெற்றோருக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. அவர்களது மகனுக்கு வலிப்பு வந்துள்ளதாகவும், சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பெற்றோர் பார்த்தபோது, சிறுவன் உயிரிழந்தார். கால், வாய், கன்னத்தில் காயம் இருந்தது. மதியம் 3:30 மணிக்கு, சிறுவனின் உடலை பள்ளி டிரைவர்கள் இருவர் காரில் கொண்டு வந்து போட்டு விட்டு சென்றதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர்.சம்பவத்தை கண்டித்து சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். சிங்கம்புணரி - திண்டுக்கல் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி, பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !