உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / என். கீழையூர் மஞ்சுவிரட்டு 500 காளைகள் பங்கேற்பு

என். கீழையூர் மஞ்சுவிரட்டு 500 காளைகள் பங்கேற்பு

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே என். கீழையூரில் சூளைக் கருப்பர்,ஆதின மிளகி அய்யனார், பொன்அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.கிராமத்தினர் கிராம கோயில் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்து காளைகள் அவிழ்த்தனர். 200க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவிலிருந்து விரட்டப்பட்டு கூட்டம் கூட்டமாக சென்றன. பங்கேற்ற காளைகளுக்கு வேட்டி வழங்கப்பட்டது.தொடர்ந்து நூற்றுக்கணக்கான காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் சிலர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் 5 பேர் மீது வழக்கு பதிந்து நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ