உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டரசன்கோட்டை மாசி தேரோட்டம் 

நாட்டரசன்கோட்டை மாசி தேரோட்டம் 

சிவகங்கை, : நாட்டரசன்கோட்டை சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மாசிமக திருவிழா பிப்., 15 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி காலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். மாசி மக திருவிழாவின் 11 ம் நாளான நேற்று காலை 8:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளினார்.நேற்று காலை 9:30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, மாசி மக திருவிழா தேரோட்டம் துவங்கியது. தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, மீண்டும் நிலையை அடைந்தது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.மாசி மக திருவிழாவின் 12 ம் நாளான இன்று காலை 10:38 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7:15 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்