மேலும் செய்திகள்
பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்
13-Aug-2025
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
10-Aug-2025
சிவகங்கை, ; இலுப்பக்குடி முதல் - அரசனுார் வரை வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுவோம் என்பது குறித்த விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் நடைபெற்றது. இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மையம் சார்பில், நேற்று துவங்கிய வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுவோம், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாக டூவீலரில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தை டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் துவக்கி வைத்தார். கமாண்டிங் அதிகாரி சந்தீப் தியானி முன்னிலை வகித்தார். உதவி கமாண்டிங் அதிகாரி ராகுல் ரானா உட்பட பயிற்சி மைய வீரர்கள் பங்கேற்றனர். டூவீலரில் வீரர்கள் தேசிய கொடிகளை ஏந்தி கொண்டு இலுப்பக்குடியில் இருந்து அரசனுார் வரை ஊர்வலமாக சென்று திரும்பினர்.
13-Aug-2025
10-Aug-2025