உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,22 நவராத்திரி விழா துவக்கம்

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,22 நவராத்திரி விழா துவக்கம்

சிவகங்கை : சிவகங்கை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.,22 ல் காப்பு கட்டுடன் நவராத்திரி விழா துவங்கி அக்.,2ல் நிறைவு பெறுகிறது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழைய அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில், செப்.,22 அன்று மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டுடன் நவராத்திரி விழா துவங்குகிறது. தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகிக்கிறார். அன்றைய தினமும் மாலை 6:00 மணிக்கு ராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருள்வார். நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் ராஜாங்கம், கன்யாகுமரி, சிவபூஜை, அன்னபூரணி, மீனாட்சி, கருமாரி அம்மன், லட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆகிய அலங்காரங்களில் எழுந்தருள்வார். செப்.,24 முதல் 25 வரை லட்சார்ச்னை, செப்.,26 ல் திருவிளக்கு பூஜை நடைபெறும். விழாவை முன்னிட்டு மாநில அளவில் இறகு பந்து, கபடி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை