நீத்தார் நினைவு பேச்சு போட்டி
சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையில் சிறப்பாக செயல்பட்டு தங்களது இன்னுயிர் நீத்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நீத்தார் நினைவு நாள் பேச்சு போட்டி நடந்தது. டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் அன்னராஜா, எஸ்.ஐ., சண்முகப்பிரியா கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி., பரிசு வழங்கினார்.