உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு: குடும்பமாக பங்கேற்பு; மதநல்லிணக்கத்தை காட்டுவதாகவும் அமைந்தது

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு: குடும்பமாக பங்கேற்பு; மதநல்லிணக்கத்தை காட்டுவதாகவும் அமைந்தது

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரைத்திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நேற்று நடந்த நிலாச்சோறு நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட சைவ, அசைவ உணவு வகைகளை வைகை ஆற்றுக்குள் கொண்டு வந்து நிலவொளியில் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரைத்திருவிழா மே 8 கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா மே 12ல் நடந்தது.நேற்று வைகை ஆற்றுக்குள் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் அழகர் பத்தி உலாத்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்த மண்டகப்படிக்கு மானாமதுரை பகுதி மக்கள் நிலாச்சோறு மண்டகப்படி என்றும் பெயர் வைத்து அழைக்கின்றனர்.நேற்று இரவு நிலாச்சோறு நிகழ்ச்சியை முன்னிட்டு மானாமதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் சைவம் மற்றும் அசைவ உணவுகளை சமைத்து கொண்டு வந்து வைகை ஆற்றில் வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வீடுகளில் சமைத்த உணவுகளை வைகை ஆற்றுக்குள் கொண்டு வந்து உறவினர்களுடன் அமர்ந்து மற்ற குடும்பத்தினருக்கும் பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ