உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பைபாஸ் ரோட்டிற்கு இடம் மாற்று இடம் வழங்கவில்லை

பைபாஸ் ரோட்டிற்கு இடம் மாற்று இடம் வழங்கவில்லை

சிவகங்கை : சிவகங்கை அருகே பைபாஸ் ரோட்டிற்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கு இழப்பீடோ, மாற்று இடமோ வழங்கவில்லை எனக்கூறி மக்கள், சட்டசபை உறுதிமொழிக்குழுவினரிடம் புகார் அளித்தனர். சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இருந்து கருங்குளம் விலக்கு வரையிலான 7.6 கி.மீ., துாரத்திற்கு முதற்கட்டமாக பைபாஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராகிணிபட்டியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை தவிர்த்து அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் பைபாஸ் ரோட்டிற்காக பையூர் பழமலை நகரில் மக்கள் (நரிக்குறவர்) 62 ஆண்டாக வசித்து வந்த 9 பேரின் பட்டா நிலத்தை எடுத்துள்ளனர். ஆனால் அதற்கு இழப்பீட்டு தொகையோ, மாற்று இடமோ வழங்காமல் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புறக்கணித்து வந்துள்ளது. பையூர் பழமலை நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள் பல முறை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், மாற்று இடமோ, நிலத்திற்கான இழப்பீடு தொகையோ வழங்காமல் புறக்கணித்து வந்துள்ளனர். இதையடுத்து, பைபாஸ் ரோட்டிற்காக வீடுகளை இழந்தவர்கள், மருது சகோதரர்கள் மணிமண்டபம் கட்டுமான பணியை பார்வையிட வந்த சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன், கலெக்டர் பொற்கொடி ஆகியோரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற குழு தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை