மேலும் செய்திகள்
நரிக்குடி அம்மன்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
03-May-2025
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள தளக்காவூரில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.தளக்காவூரில் ஒய்.எம்.சி.ஏ., கத்தோலிக்க இளைஞர் மன்றம் மற்றும் சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.இதில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. ஒரு மாட்டிற்கு 9 வீரர்கள் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே காளைகளும், மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
03-May-2025