மேலும் செய்திகள்
மஞ்சுவிரட்டு: 5 பேர் மீது வழக்கு
04-Jul-2025
வட மஞ்சுவிரட்டு
07-Jul-2025
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் வட மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகளும், 126மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். 14 சுற்றுகளாக தலா 20 நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் 9 மாடுபிடி வீரர்கள் இறக்கி விடப்பட்டனர். வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சதுர்வேதமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவத்துறை சார்பில் மஞ்சுவிரட்டு களத்தில் முகாம் அமைக்கப்பட்டு காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை மருதிப்பட்டி கிராமத்தார்கள், வடமாடு மஞ்சுவிரட்டு குழுவினர் செய்திருந்தனர்.
04-Jul-2025
07-Jul-2025