மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
11-Jun-2025
அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
11-Jun-2025
சிவகங்கை : அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச பென்ஷன் வழங்க கோரி சிவகங்கையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி தலைமை வகித்தார். நிதி காப்பாளர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முத்தழகு கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில செயலாளர் பி.பாண்டி துவக்க உரை ஆற்றினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட மகளிர் குழு நிர்வாகி கனகஜோதி நன்றி கூறினார். ஓய்வூதியர்களுக்கு தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குறைந்த பட்ச பென்ஷன் ரூ.7,850 வழங்க வேண்டும். பணி ஓய்வு நாளில் ஒட்டு மொத்த தொகையை விடுவிக்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
11-Jun-2025
11-Jun-2025