உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஞ்சுவிரட்டு திடலில் ஒன்றிய அலுவலகம் கட்ட எதிர்ப்பு: சப் கலெக்டர் ஆய்வு

மஞ்சுவிரட்டு திடலில் ஒன்றிய அலுவலகம் கட்ட எதிர்ப்பு: சப் கலெக்டர் ஆய்வு

காரைக்குடி : புதுவயல் பேரூராட்சியில் உள்ள மஞ்சுவிரட்டு திடலில் சாக்கோட்டை யூனியன் அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் சப் கலெக்டர் ஆய்வு செய்தார்.புதுவயல் பேரூராட்சியில் சாக்கோட்டை யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் அரசுக்கு சொந்தமான இடத்தில், ஒன்றரை ஏக்கரில் புதிய யூனியன் அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்திடலில் கடந்த பல ஆண்டுகளாக மஞ்சுவிரட்டு நடந்து வருவதாகவும், அவ்விடத்தில் அரசு அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புதிய யூனியன் அலுவலக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில் நேற்று சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் வருவாய்த்துறை மற்றும் யூனியன் அலுவலக அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கலெக்டர் ஆயுஷ் வெங்கட் கூறுகையில்: மஞ்சுவிரட்டு திடல் நடக்கும் இடம் அரசுக்கு சொந்தமான இடம் ஆகும்.புதிதாக யூனியன் அலுவலகம் கட்டப்பட உள்ள நிலையில் மஞ்சுவிரட்டு திடலில் கட்டக்கூடாது என்று புகார் வந்துள்ளது. விசாரணை நடத்தி முறையான பேச்சுவார்த்தைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை