ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பம்
சிவகங்கை : ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சிக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தாட்கோ மேலாளர் செலினா தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சி பெற விரும்புவோர் www.tahdco.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர், பி.எஸ்சி., நர்சிங், பொது நர்சிங் மற்றும் டிப்ளமோ ஜி.என்.எம்., ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 21 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்குள். ஒன்பது மாதம் நடைபெறும் இப்பயிற்சிக்கு விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சிக்கு பின் நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஜெர்மன் நாட்டில் மாத சம்பளம் ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை கிடைக்கும் வகையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.