உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆன்லைனில் வேலை ரூ.1.70 லட்சம் மோசடி

ஆன்லைனில் வேலை ரூ.1.70 லட்சம் மோசடி

சிவகங்கை:சிவகங்கையில் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடிய பெண்ணிடம் ரூ1.70 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் இருந்து பகுதிநேர வேலை குறித்த லிங்க் வந்துள்ளது. அந்த பெண் அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார். அவரது அலைபேசியில் ஒருவர் பேசியுள்ளார். அவர் ஆன்லைன் பணி குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய அந்த பெண் 5 வங்கி கணக்கிற்கு 8 தவணையில் ரூ.1.70 லட்சம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் மீண்டும் பணம் கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த அந்த பெண் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை