உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாதயாத்திரையாக திரும்பிய பழநி காவடிகள்

பாதயாத்திரையாக திரும்பிய பழநி காவடிகள்

நெற்குப்பை:' சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து பழநிக்கு காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்ற நகரத்தார் காவடிகள் பாதயாத்திரையாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தேக்காட்டூர் முனைச்சந்தை குப்பாபிச்சன் செட்டி குமரப்பன் கி.பி.1601 ல் காவடி கட்டி குன்றக்குடி வழியாக தைப்பூசத்திற்கு பழநிக்கு பாத யாத்திரையை துவக்கினார். தற்போது நெற் குப்பையிலிருந்து அவரது சந்ததியினர் 14வது தலைமுறையாக காவடி எடுத்து சென்றனர். பாரம்பரிய பாதையில் சென்று பிப்.13 ல் பழநியாண்டவருக்கு காவடி செலுத்தினர். மூலவருக்கு பிப்.15ல் பஞ்சாமிர்தம் அபிஷேகம், பிப்.16ல் சந்தன அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். பிப்.17ல் மீண்டும் காவடிகளுடன் பாதயாத்திரையாக திரும்பினர்.நேற்று முன்தினம் சமுத்திராப்பட்டி வந்த காவடிகளுக்கு நெற்குப்பை பூசாரி அய்யா,சந்தன அய்யா மற்றும் கண்டனுார் சாமியாடி அய்யா மற்றும் காரைக்குடி அரண்மனை பொங்கல் அய்யா ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுக்கு விபூதி, சந்தனம் வழங்கினர்.தொடர்ந்து யாத்திரை புறப்பட்ட காவடிகள் இரு வேறு வழிகளில் மேலைச்சிவபுரி, குன்றக்குடிக்கு வந்து சேர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை