உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊராட்சி செயலர்கள் சங்க  மாவட்ட செயற்குழு கூட்டம் 

ஊராட்சி செயலர்கள் சங்க  மாவட்ட செயற்குழு கூட்டம் 

இளையான்குடி: இளையான்குடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார்.மாநில இணை செயலாளர் ஜெயபரதன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகன், மாநில மகளிர் அணி இணை செயலாளர் மீனாட்சி, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், நாகராஜன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் மாரிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் குமார், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊராட்சி செயலர்களை தமிழக அரசு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்.பதிவறை எழுத்தர்களுக்கு கிடைக்க கூடிய அரசு சலுகைகள், ஊராட்சி செயலர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது உட்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றினர். ஒன்றிய செயலாளர் ராதிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை