ஊராட்சி செயலாளர் பலி
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள இ புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முனியாண்டி 40 இவர் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்துார் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். திருப்பாச்சேத்தியில் இருந்து வி.புதுக்குளம் கிராமத்திற்கு மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் அன்னியேந்தல் அருகே டூவீலரில் சென்றபோது மற்றொரு டூவீலர் மோதியதில் காயமடைந்த முனியாண்டி பலியானார்.மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.