உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முற்றுகை

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முற்றுகை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காத நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டம் தொடங்கினர். அதிகாரிகளின் சமரசத்திற்கு பின் கலைந்து சென்றனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,), துணை தலைவர் ராஜா (பா.ஜ.,) வின் கீழ் 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இங்குள்ள பி.டி.ஓ., தொடர்ந்து வளர்ச்சி பணிக்கான நிதி ஒதுக்காமல், பல லட்ச ரூபாய் வரை அலுவலக செலவினம் என தீர்மானம் வைத்ததாக கூறியும், வார்டு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும் கடந்த இரண்டு முறை நடந்த ஒன்றிய கவுன்சில் கூட்டத்தை தலைவர், துணை தலைவர் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் புறக்கணித்தனர். இதை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதபோராட்டம் நடத்தினர். அதற்கு பின்பும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், வார்டு கவுன்சிலர்களுடன் ஒத்துப்போகவில்லை. இதையடுத்து நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ., அறிவித்தது. அதன்படி பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், பொது செயலாளர் மார்த்தாண்டன், துணை தலைவர் ராஜா (பா.ஜ.,), ஒன்றிய தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, மாவட்ட செயலாளர் நடராஜன், செங்குளிபட்டி நீர்பாசன சங்க தலைவர் கருப்பையா உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தை துவங்கினர்.

சமரச பேச்சுவார்த்தை

பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தலைவர், கவுன்சிலர்களிடம் உதவி இயக்குனர் (தணிக்கை) ரவி தலைமையில், பி.டி.ஓ., உமாராணி, பி.டி.ஓ.,(ஊராட்சி) பழனியம்மாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தையில் இனிவரும் காலங்களில் தலைவர், கவுன்சிலர்களோடு இணைந்து, வார்டின் வளர்ச்சி பணிக்கான நிதியை பெற்று தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி