உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓட்டுக்கொட்டகை பள்ளி அச்சத்தில் பெற்றோர்கள்

ஓட்டுக்கொட்டகை பள்ளி அச்சத்தில் பெற்றோர்கள்

திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் பண்ணைதிருத்தி ஊ.ஒ.துவக்கப்பள்ளி 50 ஆண்டு பழைய ஓட்டுக் கொட்டகையில் செயல்படுகிறது. புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்லல் ஒன்றியம் பண்ணைதிருத்தியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 50 ஆண்டுகளாக பழைய ஓட்டுக் கொட்டகையில் இயங்கி வருகிறது. சுவர்கள் சேதமடைந்து இடியும் தருவாயில் உள்ள இக்கட்டடத்தில் தான் வகுப்புகள் நடைபெறுகிறது. மழை காலங்களில் சிரமத்துடன் மாணவர்கள் படிக்கின்றனர். வெயில் காலத்தில் வெப்பத்துடன் சமாளிக்கின்றனர். கழிப்பறை வசதியும் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பெரும்பாலான பள்ளிகளில் கான்கிரீட் கூரையிலான பாதுகாப்பான, வெப்பத்தை தடுக்கும் வகுப்பறைக் கட்டடங்கள் வந்து விட்ட நிலையில், இங்கு மாணவர்கள் ஓட்டுக்கூரையின் கீழ் வெப்பமான சூழலிலேயே படிக்க முடியாமல் தவிக்கின்றனர். வகுப்பறை நடத்த மாற்று கட்டட வசதியும் இங்கில்லை, எனவே வாடகைக் கட்டடத்திற்கு வகுப்பை மாற்றி சேதமடைந்துள்ள இந்த ஓட்டுக் கொட்டகையை அகற்றி புதிய வகுப்பறைக்கட்டடம், கழிப்பறை, குடிநீர் தொட்டி வசதியுடன் கட்ட பெற்றோர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ