சைலன்சர் சத்தத்தால் பயணிகள் அதிர்ச்சி
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடியில் டூவீலர்களில் சைலன்சர் சத்தத்தை அதிகமாக வைத்துக் கொண்டு இளைஞர்கள் சிலர் வேகமாக செல்வதால் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். மானாமதுரை,இளையான்குடி பகுதிகளில் இளைஞர்கள் சிலர் தற்போது அதிநவீன ஸ்போர்ட்ஸ் ரக டூவீலர்களை வைத்துக் கொண்டு அவற்றின் சைலன்சர்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய உபகரணங்களை மாட்டிக்கொண்டு அதிவேகமாக செல்கின்றனர். அதில் எழும் சத்தத்தினால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். இவர்கள் நகர் பகுதிக்குள் அடிக்கடி பைக் ரேஸ் நடத்துவதாலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்காணிக்க வேண்டிய டிராபிக் போலீசார் இவர்களை எல்லாம் விட்டு விடுகின்றனர்.