உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பஸ்களில் ஸ்டெப்னி டயர், ஜாக்கி மாயம் காத்து கிடக்கும் பயணிகள்

அரசு பஸ்களில் ஸ்டெப்னி டயர், ஜாக்கி மாயம் காத்து கிடக்கும் பயணிகள்

திருப்புவனம்: மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தொலைதுார அரசு பஸ்களில் ஸ்டெப்னி டயர்கள், ஜாக்கி உள்ளிட்டவை இல்லாததால் டயர் பழுதானால் நீண்ட நேரம் பயணிகள் காத்து கிடக்கின்றனர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக இளையான்குடி, ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலம், ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம் கோட்டம் சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொதுவாக பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் டயர் பழுதானால் உடனடியாக மாற்ற டயர்கள், ஜாக்கி, லீவர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தி டயர்களை மாற்றி பயணத்தை தொடர வேண்டும் என்பது விதி. இதற்காக ஒவ்வொரு வாகனத்திலும் இது உண்டு.தொலை தூர அரசு பஸ்களில் கண்டிப்பாக இருக்க வேண்டும், புதிய வாகனங்கள் வாங்கும் போது அதில் ஸ்டெப்னி டயர், ஜாக்கி, லீவர், முதல் உதவி பெட்டி உள்ளிட்டவைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும், அப்போது தான் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்.நடைமுறையில் கிளை மேலாளர்கள் புது வண்டியில் உள்ள ஸ்டெப்னி டயர்களை கழற்றி வேறு பஸ்களில் பொருத்தி இயக்குகின்றனர். இதனால் டயர்கள் பழுதாகும் போது பயணிகள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. திருப்புவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தட்டான்குளம் என்ற இடத்தில் டயர் வெடித்து கழன்று ஓடிய சம்பவத்தில் புத்தம் புதிய பஸ்சான அதில் ஸ்டெப்னி டயர், ஜாக்கி, லீவர் உள்ளிட்டவை இல்லை.இதனால் அடுத்தடுத்து வந்த பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.எனவே புதிய பஸ்களில் ஸ்டெப்னி, ஜாக்கி உள்ளிட்ட உபகரணங்களை வேறு பஸ்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், டயர்கள் பழுதானால் உடனடியாக ஸ்டெப்னி டயர்களை மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை