மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
6 hour(s) ago
பயிற்சி முகாம்
6 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
7 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
7 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
7 hour(s) ago
காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். மாதத்திற்கு 250-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. இங்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை, ரத்த வங்கி, சி.டி., ஸ்கேன், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், டயாலிசிஸ், காது மூக்கு தொண்டை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்படுகிறது. இங்கு வெள்ளி தோறும் மனநலம் பாதித்தோருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு மருந்துகள் வழங்கப்படும். மருந்து வழங்கும் இடத்தில் இருவர் மட்டுமே பணியில் உள்ளதால் மருந்துகள் பெறுவதில் அதிக தாமதம் ஏற்படுகிறது. இதனால் மனநலம் பாதித்தோரை அழைத்து வருவோர் நோயாளியை பாதுகாக்கவோ, மருந்து வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். இது குறித்து காரைக்குடி சண்முகசுந்தரம் கூறியதாவது: மருந்து வழங்கும் இடத்தில் போதிய ஆட்கள் இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் மனநலம் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அன்று ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். ஒரு மாதத்திற்கு மருந்துகள் தருகின்றனர். மருந்து வாங்க ஒருநாள் தாமதம் ஏற்பட்டாலும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகிவிடுவர்.மருந்து வாங்க நீண்ட நேரம் நிற்கும் போது நோயாளிகள் தவிக்கின்றனர். எனவே மாத்திரைகள் வழங்கும் இடத்தில் போதிய மருந்தாளுநர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago