பிள்ளையார்பட்டியில் பேவர் பிளாக் பதிப்பு
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் மேற்கு ரதவீதியில் ரோட்டோரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி துவங்கியது.பிள்ளையார் பட்டியில் கோயிலைச் சுற்றி ரதவீதியில் தார் ரோடு போடப்பட்டுள்ளது. ரோட்டோரங்களில் மண் தளமாக உள்ளது. தற்போது இந்த மண் தளங்களில் பேவர்பிளாக் பதிக்கும் திட்டத்தை கோயில் நிர்வாகம் துவங்கியுள்ளது. அறநிலையத்துறை அனுமதியுடன் திருக்கோயில் நிதியின் கீழ் ரூ.60 லட்சம் செலவில் பேவர் பிளாக் கற்கள் ரோட்டோர மண் தளங்களில் பதிக்கப்பட உள்ளது. அதற்கான பூர்வாங்கப் பணி மேலரதவீதியில் நடக்கிறது. கோயில் பின்புறத்திலும் பேவர் பளாக் கற்கள் பதிக்கப்பட உள்ளது.