உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பென்ஷன் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

பென்ஷன் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் இ.பி.எப்., பென்ஷன் பெறும் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆறுமுகம், நந்தகுமார் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்., பாண்டி, மாவட்ட குழு நாகலிங்கம், மாவட்ட தலைவர் உமாநாத், மாவட்ட பொருளாளர் அய்யம்பாண்டி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் உலகநாதன் பங்கேற்றனர். இ.பி.எப்., பென்ஷன் பெறுவோருக்கு கடந்த 10 ஆண்டாக எவ்வித உயர்வும் இன்றி மாதம் ரூ.1000 மட்டுமே பெறுகின்றனர். சட்டப்படியான குறைந்த பட்ச பென்ஷன் ரூ.9,000 வழங்க வேண்டும். மூத்த குடிமக்களை பாதுகாத்திட கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அரியானா, புதுச்சேரி அரசு போல் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். கலெக்டர் பி.ஏ., (பொது) விஜயகுமாரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை