மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்க மாவட்ட அளவிலான கூட்டம்
25-Dec-2024
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா மாவட்டத் துணைத் தலைவர் தனுஷ்கோடி தலைமையில் நடந்தது.வட்ட கிளைச்செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். வட்ட கிளைத்தலைவர் குருசாமி, துணைச் செயலர் திருமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ராமையா, மகளிரணி துணை செயலாளர் செல்வசுந்தரி முன்னிலை வகித்தனர்.சிங்கம்புணரி உதவி கருவூல அலுவலர் ராஜா, கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் முருகன், டாக்டர் ஜெயக்கண்ணன் பேசினர். மாநிலச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்டத் தலைவர் திரவியம், மாவட்டச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன், பொருளாளர் ஹக்கீம் பங்கேற்றனர். வட்ட பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்.
25-Dec-2024