உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தாசில்தாருடன் மக்கள் வாக்குவாதம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தாசில்தாருடன் மக்கள் வாக்குவாதம்

சிவகங்கை; சிவகங்கை அருகே வாணியங்குடியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மனு அளிக்க வந்த சிலர் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி, பனங்காடி ரோட்டில் உள்ள தனியார் மகாலில் நேற்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்டதால், அதிருப்தியான மக்கள் நேற்று வாணியங்குடி ஊராட்சியில் நடந்த முகாமில் அதிகளவில் மனுக்கள் அளிக்க வரவில்லை. பெரும்பாலான மனுக்கள் வாங்கும் 'டேபிள்' வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் தான் ஓரளவிற்கு மக்கள் மனு அளிக்க வரத்துவங்கினர். சிவகங்கை அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர், தனது மனைவி பெயரில் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பத்தை வாங்கியுள்ளார். இந்த விண்ணப்பத்துடன், மகால் நுழைவு வாயிலில் நின்ற ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., சேது என்பவரிடம் விபரம் கேட்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மனைவியின் கையெழுத்துடன் முகாமில் வழங்குவதற்காக முயற்சித்தார். மனுவுடன் மகால் நுழைவு வாயில் நோக்கி சென்றபோது, அங்கு வந்த சிவகங்கை தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலகுரு, மனுவுடன் சென்ற பழனிச்சாமியிடம் மனுவை வெளியே எடுத்து செல்லக்கூடாது என அவரிடம் கூறினார். மனு அளிக்க வந்த மக்கள், தாசில்தார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து கலெக்டர் பொற் கொடியிடம் புகார் செய்யப்பட்டது. கலெக்டர் உத்தரவுபடி, முகாம் நடைபெற்ற மகாலுக்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, தாசில்தாரை கண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை