உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர், ரோடு வசதியில்லாத காரைக்குடி பொன்நகர் * அவதியில் மக்கள்

குடிநீர், ரோடு வசதியில்லாத காரைக்குடி பொன்நகர் * அவதியில் மக்கள்

காரைக்குடி -: காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்நகரில் ரோடு, குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்நகர், அழகப்பா நகர் வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசதிக்கின்றனர். தெருக்கள் மட்டுமே 15 க்கு மேல் உள்ளது. அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் வசிக்கின்றனர். ஆனால், இந்நகருக்கு தேவையான ரோடு, குடிநீர், கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட எந்த வசதிகளும் இந்நகருக்கு ஏற்படுத்தி தரப்படவில்லை. மழைக்காலங்களில் இந்தரோட்டில் சகதிகள் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே பொன்நகரில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி