உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நகராட்சியுடன் இணைக்க வாணியங்குடி மக்கள் எதிர்ப்பு 

நகராட்சியுடன் இணைக்க வாணியங்குடி மக்கள் எதிர்ப்பு 

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியுடன் அருகில் உள்ள காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை இணைத்து, வளர்ந்த நகராட்சியாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வாணியங்குடி ஊராட்சியில் வார்டு எண் 2 மற்றும் 7 தவிர 14.37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள 22,652 பேரை சிவகங்கையுடன் இணைக்க முடிவு செய்துள்ளனர். அதே போன்று காஞ்சிரங்கால் ஊராட்சியில் 10 உட்கடை கிராமங்களில் உள்ள 8.60 சதுர கிலோ மீட்டர் பரப்பை, 12,219 மக்கள் தொகையுடன் இணைக்க உள்ளனர். இதற்கு இரு ஊராட்சி மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன் வாணியங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை