மேலும் செய்திகள்
நள்ளிரவில் 1 மணி நேரம் மின் வெட்டு
28-Jun-2025
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை மின்தடை நீடித்ததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். மானாமதுரை துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. காலை 10:00 மணிக்கு மின்தடை செய்யப்பட்ட நிலையில் மானாமதுரை நகர்ப் பகுதிகளில் மதியம் 3:10 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது.மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் இளையான்குடியை ஒட்டிய கிராமப் பகுதிகளிலும் நள்ளிரவு 12:00 மணி வரை மின்தடை நீடித்ததால் கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகினர். நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.மேலும் வயல்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் அவதிக்குஉள்ளாயினர்.
28-Jun-2025