உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் டோக்கனுக்கு குவிந்த மக்கள்

தேவகோட்டையில் டோக்கனுக்கு குவிந்த மக்கள்

தேவகோட்டை : தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பை முதலில் அறிவித்தது. அதில் ஆயிரம் ரூபாய் அறிவிப்பு இல்லை. மீண்டும் புதிய அறிவிப்பாக சில நிபந்தனைகளுடன் ரூ. ஆயிரம் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்தது. பொங்கல் தொகுப்பு பெற ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் முதல் டோக்கன் வழங்கப்பட்டது. ஆண்களை காட்டிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு வரை வரிசையில் காத்திருந்தும் பலர் டோக்கன் இல்லாமல் திரும்பினர். பலருக்கு ரூ.ஆயிரம் இல்லை எனக்கூறி டோக்கன் வழங்காமல் திருப்பி அனுப்பினர். காத்திருந்து ஏமாற்றமடைந்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் அரசை வசை பாடி சென்றனர். நேற்று காலை அனைத்து ரேஷன் கடைகளின் முன் ஆயிரம் ரூபாய் பயனாளிகளின் பட்டியல் வைத்தனர். பெயர் இருந்தால் டோக்கன் வாங்கி கொள்ளும்படி பணியாளர்கள் தெரிவித்து விட்டனர். பலரது பெயர் இல்லை.காரணம் தெரியவில்லை எனக் கூறி அதிருப்தியில் சென்றனர். பெண்களின் எதிர்ப்பு, அதிருப்தி அரசின் கவனத்திற்கு சென்ற நிலையில் நேற்று மதியம் அனைத்து அட்டைக்கும் ரூபாய் ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்தது . இத்தகவலை ரேஷன் கடைகளில் மக்களிடம் தெரிவித்தனர். அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் டோக்கன் வழங்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ